அடுக்கடுக்காக இருபெரும் அரசியல் ஜாம்பவான்களை இழந்தது தமிழகம்....

Report Print Evlina in அரசியல்

தமிழக அரசியலில் பல்வேறு கட்சிகள் அங்கம் வகித்து வருகின்ற நிலையில், ஆட்சி கட்டிலில் மாறி மாறி தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் ஆட்சி பீடமேறுகின்றது.

இந்த நிலையில் கடந்த 50ஆண்டுகளாக தி.மு.கட்சியின் தலைவராக கருணாநிதி திகழ்ந்துள்ளார், அவ்வாறே அ.தி.மு.கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவும் அரசியல் ஜாம்பவானாக திகழ்ந்துள்ளார்.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்ணுதாரமான விளங்கியவர். அத்துடன்,அவர் வழி பின்பற்றி அரசியலுக்கு வந்த பெண்கள் ஏராளம். அவர் பெண்களுக்கான நலத்திட்டங்களை செய்துள்ளதுடன், தனது கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

தொடர்ந்தும் 5 தடவை முதல்வராக பதவி வகித்து அரசியலில் தனெக்கென ஒரு இடத்தை வகித்து வந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மக்கள் பிரதிநிதியாக மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து இறுதி வரை போராடிய ஒருவராக கருணாநிதி விளங்குகின்றார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான நன்மைகளை மேற்கொண்டுள்ளதுடன், தனது கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க தலைவராக காணப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி 13 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவராவார்.

அது போன்று 5முறை முதல்வராகவும் பதவி வகித்தார். எம்.ஜி.ஆர் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி இவர்களுள் இருந்த நட்பு அப்படியேதான் இருந்தது.

இந்த வகையில் கடந்த இரு ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பு காரணமாக கட்சியிலும் நேரடியாக அவர் ஈடுபடாவிட்டாலும் ஆலோசனைகளை மட்டும் வழங்கி வந்தார்.

கடந்த 11நாட்களாக காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று மாலை காலமாகியுள்ளதுடன், இது தமிழக மக்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா, காமராஜர், எம். ஜி. ஆருக்கு பின்னர் தமிழக அரசியல் ஜாம்பவான்களாக விளங்கிய கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் இழந்து மக்கள் பெரும் துயரினை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தற்போது தமிழகம் இரு பெரும் தலைவர்களை இழந்து தவிக்கிறது.

மேலும், அவர்கள் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் தமிழக மக்கள் நெஞ்சில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.

இவ்வாறு அடுக்கடுக்காக தொடர்ந்தும் அரசியல் ஜாம்பவான்களை இழந்து வரும் தமிழகம் தற்போது வேதனையுற்றுள்ளது.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers