இலங்கை பொருளாதாரத்தின் இதயம்: பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Steephen Steephen in அரசியல்

கொழும்பு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறக்குமாறு ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பு துறைமுகம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது நாட்டில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் சொத்து என்ற வகையில் கொழும்பு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட திறக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பயிற்சிகளை முடித்து கொண்ட துறைமுக பாதுகாப்பு அதிகாரிகளின் அணி வகுப்பு மரியாதை அணி வகுப்பு மரியாதையை இன்று பார்வையிட்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொருளாதாரத்தின் இதயம் என கருதப்படும் கொழும்பு துறைமுகம் இந்த வருடம் 13.2 பில்லியன் ரூபா வருவாய் ஈட்டியுள்ளது.

இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்து வருகிறது எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers