தங்கத்திற்கான வரி அதிகரிப்பால் ஏற்படப்போகும் ஆபத்து

Report Print Murali Murali in அரசியல்

இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத தீர்வை வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் நாட்டிற்கு, சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வரும் வழிவகைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “தங்கம் போன்ற பொருட்களுக்கு வரி விதிப்பதில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. மாறாக சட்டவிரோமாக முறையில் அவற்றை நாட்டிற்கு கொண்டு வரும் செயற்பாடுகள் தலைத்தூக்கும்

இறக்குமதியாளர்களுக்கு 15 வீத அதிகமான வரி விதிப்பு மட்டுமல்ல. தேசிய கட்டட வரி மற்றும் தனிப்பயன் கடமைகள் போன்ற வரிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு பவுண் தங்கம் 55 ஆயிரம் ரூபாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வரி அதிகரிப்பினால் மேலதிகமாக எட்டாயிரம் ரூபா வரையில் செலுத்த வேண்டிய நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வரி வருமானம் என்பது அரசாங்கத்தின் வருவாயை கூட்டாது. மாறாக சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கொண்டு வருபவர்களின் போக்கை மாத்திரம் உருவாக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers