இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவிப்பு!

Report Print Ajith Ajith in அரசியல்

தன்னியக்கக் கூற்றுப் பொறி (ATM) அல்லது வேறு நாணயத்தாள் கையாளுகின்றஇயந்திரங்களிலிருந்து பொதுமக்கள் உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாளொன்றினைப்பெற்றுக்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் அத்தகைய நாணயத்தாளை அருகிலுள்ள வங்கிக்கிளையில் மாற்றிக்கொள்ளலாம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணயத்தாள்களை 2018.03.31ஆம் திகதிக்குப் பின்னர்மாற்றிக்கொள்வது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள பாரியளவான கோரிக்கைகளையும்பொதுமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்தியவங்கியானது வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட மற்றும்உருச்சிதைக்கப்பட்டநாணயத்தாள்களை மாற்றும் சேவையினை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்குமத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, அத்தகைய நாணயத்தாள்களை இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில்அல்லது அனுராதபுரம், மாத்தளை, மாத்தறை, திருகோணமலை, நுவரெலியா மற்றும் கிளிநொச்சிஆகிய இடங்களில் அமையப் பெற்றுள்ள பிரதேச அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு அல்லதுமுறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் விண்ணப்பப்படிவத்துடன்சேர்த்து பின்வரும் விலாசத்திற்கு அத்தகைய நாணயத்தாள்களை பதிவுத் தபால் மூலம்அனுப்புமாறு பொதுமக்களுக்கு மத்திய வங்கி அறிவித்தல் விடுத்துள்ளது.

தொடர்புடைய விண்ணப்பப் படிவத்தினை இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்திலிருந்து ( www.cbsl.gov.lk), பிரதேச அலுவலகங்களிலிருந்து அல்லது ஏதேனும் உரிமம் பெற்ற வர்த்தகவங்கிக் கிளையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், சிறிய புள்ளியொன்றின் அல்லது கோடொன்றின் வடிவில் அடையாளமிடப்பட்டுள்ளநாணயத் தாள்கள் வேண்டுமென்று உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களாககருத்திற்கொள்ளப்பட மாட்டாது என்பதுடன் அத்தகைய நாணயத் தாள்களைகொடுக்கல் வாங்கல்களுக்காக தொடர்ந்தும் பயன்படுத்த முடியும்.

சாதாரணமாகத் தேய்வடைதல், சாதாரணமாக கிழிதல் அல்லது இயற்கை அனர்த்தங்களின்காரணமாக சேதமடைந்த நாணயத்தாள்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்பெற்றுக்கொள்ளும் சேவை எவ்வித மாற்றங்களுமின்றி தொடர்ந்தும் இடம்பெறும்.

மேலும், வேண்டுமென்று சேதமாக்கப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட அல்லதுஉருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை கண்டுபிடிப்பதற்காக நாணயத்தாள்செயன்முறைப்படுத்தல் இயந்திரங்களை அளவுத்திருத்தம் செய்வதற்கு அனைத்து உரிமம் பெற்றவர்த்தக வங்கிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கிஅறிவித்துள்ளது.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers