உங்கள் வியாபாரத்தில் நஷ்டமா? இதை படியுங்கள் தீர்வை நோக்கி பயணிக்கலாம்!

21 ஆம் நூற்றாண்டில் இருக்கும் எத்தனையோ சிறு வியாபாரிகள் பல வருட காலங்களாக அதே நிலையில் இருக்கின்றமை யாவரும் அறிந்ததே!

இதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்...

வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள், தனி நபர் வியாபாரிகள் என வகைப்படுத்தினால் அதில் வரையறுக்கபட்ட நிறுவனங்களின் வருடாந்த வருமானம் பல மில்லியன் ரூபாயாக இருக்கும்.

அதில் எல்லாச்செலவுகளும் தவிர்த்து பெரியளவான இலாபத்தினையும் அடைவர்,

அடைந்த இலாபத்தினை அவர்களது முதலீட்டிலும் இன்னும் பல புதிய வியாபாரங்களை காலத்திற்கு ஏற்றவாறும் மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறும் ஆரம்பித்து முன்னோக்கி செல்வார்கள்.

அதேபோன்று வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் ஒவ்வொரு துறையிலும் அனுபவமும், அதற்கான பட்டப்படிப்பினையும் முடித்தவர்களாகவும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிறுவியாபாரிகளில் பலர் அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு வியாபாரங்களை ஆரம்பிப்பது வழக்கம். அதிலும் அவர்களில் முதலீடும் மிக குறைந்ததாகவே இருக்கும்.

அதேபோன்று துறைசார் படிப்பும் இருக்க வேண்டும். இல்லையேல் துறைசார் அனுபவம், படிப்பு என்பவை இருக்கும் ஒருவரை வேலைக்கு அமர்த்தி அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் ஒரு நிறுவனத்தை கொண்டு செல்வதன் மூலம் ஒரு தரமான நிறுவனமாகவும், இலாபகரமான நிறுவனமாகவும் செயற்படுத்த முடியும்.

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு அனுபவமுள்ள ஒருவரை ஆரம்பத்திலேயே வேலைக்கு அமர்த்துவதில் உள்ள பிரதான பிரச்னையாக சிறு முதலீட்டாளர்களுக்கு காணப்படுவது என்ன வென்றால், துறைசார் பட்டப்படிப்பும், அனுபவமும் உள்ளவர்களின் மாதாந்தர கொடுப்பனவு சிறு முதலீட்டாளர்களின் முதலீட்டையும் பார்க்க அதிகமாக காணப்படுவதே காரணம்.

இதற்கு சிறு முதலீட்டாளர்கள் (Business Consultant) வியாபார நிபுணர்களின் அறிவுறுத்தல்களையும், அதேபோன்று வியாபாரத்திற்கான அடிப்படை தேவைகள், அதாவது இன்றைய காலக் கட்டத்தில் வாடிக்கையாளர்களிடம் தமது வியாபார பொருட்களை அல்லது சேவையினை கொண்டு செல்வது எப்படி என்பதை அறிவது மிக முக்கியமானதாகும்.

சிறுவியாபாரிகளில் பலர் தற்பொழுது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக தரமுயர்த்திக்கொண்டிருக்கும் போதிலும் ஒரு சில சிறுவியாபாரிகள் தமது வியாபாரத்தை “மற்றவர்கள் செய்கின்றார்கள் அதனால் நானும் ஒரு வியாபாரத்தை செய்யப்போகின்றேன்” என்று ஆரம்பிப்பதும் யாவரும் அறிந்ததே!

வியாபாரத்தை யாரும் ஆரம்பிக்கலாம், வியாபாரம் நட்டமானது அல்ல, அதை செய்பவர்களின் செயற் திறமையின்மையே நட்டமாவதற்கு பிரதான காரணம் என்பதே சரியான உண்மை.

ஏனெனில் அதே வியாபாரத்தை செய்யும் மற்றவர்கள் இலாபம் அடைவார்களானால் எப்படி வியாபாரம் நட்டமடையும்? எப்படி வாடிக்கையாளர்களுக்கு எமது பொருட்களை அல்லது சேவையினை கொண்டு செல்வது?

வாடிக்கையாளர்களின் விருப்பம், வாடிக்கையாளர்கள் ஒன்றுகூடும் இடம், வாடிக்கையாளர்களின் வருமானம், வாடிக்கையாளர்களின் நேரம் போன்றவை மிகவும் அவசியமானதே,

அப்படியானால் அது இன்றைய காலக்கட்டத்தில் online மூலமாக மட்டுமே பெரியளவான வாடிக்கையாளர்களை இனங்காண முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.

அதிலும் லங்காசிறி ஊடகம் உலகத்தமிழர்கள் தேவைக்கேற்ப அவர்களின் அன்றாட வாழ்க்கை அனுபத்திற்கேற்பவும் பலதரப்பட்ட விளம்பரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் ஆயிரக்கணக்கான சிறுவியாபாரிகள் பலனடைந்து தற்பொழுது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதும் பெருமைக்குரிய விடயமே!

அதே போன்று லங்காசிறியினூடாக உங்களின் வியாபாரத்திற்கு எந்த விளம்பரம் பொருத்தமானது என்று வாடிக்கையாளர் சேவையின் நிபுணர்களின் உதவியை பெற்று மென்மேலும் தரமுயர்த்துவதற்கு இன்றே அழைக்கின்றோம்...

24 மணி நேர சேவைக்கு +44 20 8133 8373 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.