மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு உதவிகளை செய்யக்கூடிய வகையில் Google Assistant வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக விடை தெரியாத கேள்விகளுக்கு விடைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நாளாந்த செயற்பாடுகளை திட்டமிட முடியும்.
அதுமாத்திரமன்றி வீட்டிலுள்ள பல இலத்திரனியல் உபகரணங்களை குரல்வழி கட்டளைகள் மூலம் கட்டுப்படுத்தவும் முடியும்.
இப்படியிருக்கையில் மேலும் ஒரு புதிய வசதி Google Assistant இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது குடும்ப அங்கத்தவர்கள் எங்கெங்கு சென்றிருக்கின்றார்கள் என்ற தகவலையும் பெற்றுக்கொள்ள முடியும்.
‘Hey Google, where’s my family?’ எனும் குரல்வழி கட்டளையின் ஊடாக இந்த தகவலை பெறக்கூடியதாக இருக்கின்றது.
கூகுள் மேப்பின் உதவியுடன் குடும்ப அங்கத்தவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பதை Google Assistant தெரிவிக்கின்றது.