சமூகவலைத்தளங்களில் Stories எனும் வசதியானது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இதனை அடுத்து அண்மையில் LinkedIn தளமும் இவ் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இப்படியிருக்கையில் கூகுள் நிறுவனமானது தனது கூகுள் அப்பிளிக்கேஷனிலும் இவ் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.
எனினும் கூகுளினால் அறிமுகம் செய்யப்படும் வசதியானது Web Stories என அழைக்கப்படுகின்றது.
இவ் வசதியினை அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்கள் இரண்டிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
இதுவேளை கூகுள் அப்பிளிக்கேஷனை உலக அளவில் சுமார் 800 மில்லியன் பயனர்கள் பயன்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.