இணைய உலகை ஆட்டிப்படைக்கும் ஜாம்பவான் ஆக கூகுள் விளங்குகின்றது.
இதற்கு பின்னரே அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் காணப்படுகின்றன.
எனினும் அப்பிளிக்கேஷன்கள் மூலம் வருவாய் ஈட்டுவதில் கூகுள் நிறுவனத்திற்கே சிம்ம சொற்பனமாக விளங்குகின்றது ஆப்பிள்.
இந்த வருடத்திற்கான மூன்றாம் காலாண்டு வருவாய் தொடர்பில் இரு நிறுவனங்களினதும் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் ஆப்ஸ் ஸ்டோரின் மூலம் ஆப்பிள் நிறுவனம் 19 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.
அதேபோன்று கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரின் ஊடாக 10.3 பில்லியன் டொலர்களை மாத்திரமே ஈட்டியுள்ளது.
இந்த தரவுகளின் அடிப்படையிலேயே அப்பிளிக்கேஷன்கள் மூலம் ஆப்பிள் நிறுவனம் கூகுளை விடவும் இரு மடங்கு வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் அன்ரோயிட் சாதனங்களுக்கான பெருமாளவான அப்பிளிக்கேஷன்களை கூகுள் இலவசமாகவே வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.