பயனர்களிடம் கட்டணம் அறிவிட தயாராகும் இன்ஸ்டாகிராம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கள் என்பவற்றினை பகிரும் பிரபலமான தளமாக இன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.

முற்றிலும் இலவசமாகவே இத் தளம் தனது சேவையை வழங்கிவருகின்றது.

எனினும் இதில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு தற்போது தீர்மானித்துள்ளது.

அதாவது தமது கேப்ஷனில் பயனர்கள் இணைய இணைப்பினை இணைக்கும்போது அவர்களிடமிருந்து குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தினை அறவிட தீர்மானித்துள்ளது.

இணையத்தளங்களை பிரபல்யப்படுத்துவதற்காகவே இவ்வாறு இணைப்பு வழங்கப்படுகின்றது.

எனவே இதன்போது 2 டொலர்கள் வரை பெற்றுவிட்டு இணைப்பினை காட்சிப்படுத்தக்கூடிய வகையில் மாற்றம் கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு பணம் செலுத்தப்படவில்லையாயின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் அதனை மற்றையவர்கள் பார்வையிட முடியாது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்