தனது முதலாவது ஒன்லைன் ஸ்டோரினை திறக்கும் ஆப்பிள்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஆப்பிள் நிறுவனமானது பல நாடுகளில் ஆப்பிள் ஸ்டோர்களை கொண்டுள்ளது.

இங்கு வாடிக்கையாளர்கள் நேரில் சென்று ஆப்பிள் சாதனங்களை கொள்வனவு செய்ய முடியும்.

எனினும் ஒன்லைன் ஸ்டோர்களை குறைந்த அளவிலேயே ஆரம்பித்திருந்தது.

ஆனால் அண்மையில் ஏற்பட்டிருந்த கொரோனா அனர்த்தத்தின் பின்னர் ஒன்லைன் ஸ்டோர்கள் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் தனது முலாவது ஒன்லைன் ஸ்டோரினை ஆப்பிள் திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஒன்லைன் ஸ்டோரினூடாக எதிர்வரும் தீபாவளி தினத்திலிருந்து ஆப்பிள் சாதனங்களை அந்நிறுவனம் விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதுவரை தனது சாதனங்களை அமேஷான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்து வருகின்றமை அறிந்ததே.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்