பாதிப்பை சந்தித்த அதே நேரத்தில் ஊபருக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பரவல் ஆனது இன்னும் முழுமையாக அகலவில்லை.

இதனால் ஏராளமான வேலையிழப்புக்கள் உட்பட பொருளாதாரப் பிரச்சினைகளும் ஏற்பட்டடுள்ளன.

தவிர பல நாடுகளில் லொக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததனால் வாகனப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தன.

இதனால் ஊபர் நிறுவனத்தின் ஒன்லைன் வாடைகை வாகன சேவை முற்றாக பாதிப்படைந்தது.

இதனால் இரண்டாம் காலாண்டிற்கான வருமானமும் 29 சதவீதத்தினால் வீழ்ச்சியடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் அந்நிறுவனம் வழங்கிவரும் ஊபர் ஈட் (Uber Eat) எனும் உணவு டெலிவரி செய்யும் சேவைக்கான வியாபாரம் இரட்டிப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்