பல இலட்சங்கள் பெறுமதியான சாம்சுங் கைப்பேசியின் பாகங்கள் திருட்டு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
38Shares

இந்தியாவின் நொய்டா பகுதியில் சாம்சுங் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஸ்டோர் காணப்படுகின்றது.

இங்கிருந்து இந்திய பெறுமதியில் சுமார் 80 இலட்சங்கள் பெறுமதியான கைப்பேசிகளுக்கான பாகங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் திருட்டுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் 4 நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 20.50 இலட்சங்கள் பணமாக மீட்கப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் திருடிய பொருட்களுள் கைப்பேசி திரைகள், சார்ஜர்கள் உட்பட மேலும் பல கைப்பேசி பாகங்கள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இவர்கள் திருடிய கைப்பேசி திரைகளை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளனர்.

எனினும் இதன் பெறுமதியானது 2,500 ரூபாய்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்