இவ்வாறான விளம்பரங்களை தடைசெய்கின்றது கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
47Shares

கூகுள் விளம்பரங்கள் இலகுவாக பலரையும் சென்றடைவதன் காரணமாக அனேகமான நிறுவனங்கள் இதனை நாடுகின்றன.

குறிப்பாக இணையத்தளங்கள் மற்றும் அப்பிளிக்கேஷன்கள் போன்றவற்றினையும் இங்கு விளம்பரம் செய்ய முடியும்.

எனினும் இவ்வாறு விளம்பரம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் உண்டு.

அந்த வரிசையில் தற்போது உலகளவில் அதிக பேசுபொருளாக காணப்படும் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூகுள் விளம்பரங்களில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கிய இணையத்தளங்கள் மற்றும் அப்பிளிக்கேஷன்கள் என்பற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காரணம் கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதோடு அவை மக்களை பீதிக்கு உட்படுத்துகின்றமையாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்