இணைய இணைப்பு இன்றி மொபைல் சாதனங்களுக்கு இடையில் பணப்பரிமாற்ற வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தற்போது மொபைல் சாதனங்களில் ஊடாக வழங்கப்படும் பணப்பரிமாற்ற சேவையானது அதிகளவானவர்களால் வரவேற்கப்படுகின்றது.

எனினும் இணைய இணைப்பு இச் சேவைக்கு அவசியமாக இருப்பதுடன், சில சமயங்களில் பாதுகாப்பு அற்றதாகவும் இருக்கின்றது.

எனவே இதற்கு பதிலாக இணைய இணைப்பு இல்லாத போதிலும் பணப்பரிமாற்ற சேவையை செய்யக்கூடிய வசதியை Lava நிறுவனம் வழங்கவுள்ளது. இதற்கு Lava Pay என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொபைல் சாதனங்களில் இருந்து மற்றைய மொபைல் சாதனங்களுக்கு இலகுவாக பணப்பரிமாற்றம் செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lava Pay அப்பிளிக்கேஷனில் மொபைல் இலக்கத்தினை உட்புகுத்துவதன் மூலம் குறித்த கைப்பேசிக்கு பணத்தினை அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்