இரண்டு நாட்களுக்கு முன்னரே புத்தாண்டை வரவேற்க தயாரானது கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

விடேச தினங்களை கூகுள் நிறுவனம் தனது வித்தியாசமான டூடுல் வடிவமைப்புடன் வரவேற்பது வழமையாகும்.

இதேபோன்று 2020 ஆம் ஆண்டினை வரவேற்பதற்கும் கூகுள் நிறுவனம் தயாராகியுள்ளது.

இதற்கான டூடுலை இரண்டு தினங்களுக்கு முன்னரே தனது தேடுதளத்தில் காட்சிப்படுத்த ஆரம்பித்துவிட்டது கூகுள்.

இந்த டூடுலில் Froggy எனும் கதாபாத்திரத்தினையும் அறிமுகம் செய்து காட்சிப்படுத்தியுள்ளமை விசேட அம்சமாகும்.

அத்துடன் தொப்பி அணிந்த பறவை மற்றும் வர்ணங்கள் நிறைந்த வாண வேடிக்கைகள் என குறித்த டூடுல் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை புத்தாண்டு பிறக்கும் நேரத்திலிருந்து இந்த டூடுலுக்கு அனிமேஷன் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...