வெளியானது YouTube Rewind 2019 வீடியோ: நீங்கள் பார்த்துவிட்டீர்களா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

முன்னணி வீடியோ பகிரும் தளமாகத் திகழும் யூடியூப் ஆனது YouTube Rewind எனும் தலைப்பில் ஒவ்வொரு வருடமும் வீடியோ ஒன்றினை வெளியிடுவது வழக்கமாகும்.

வருடத்தின் இறுதி மாதத்தில் வெளியிடப்படும் இந்த வீடியோவில் அவ்வருடத்தின் முன்னைய மாதங்களில் உலகெங்கிலும் இடம்பெற்ற முக்கியமான விடயங்களை ஒருங்கிணைத்து தந்து வருகின்றது.

இதேபோன்று இவ் வருடமும் YouTube Rewind 2019 எனும் வீடியோவை பல்வேறு நிகழ்வுகளைத் தாங்கியதாக வெளியிட்டுள்ளது.

மேலும் இவ் வீடியோ இதுவரை 6.7 மில்லியன் டிஸ்லைக் பெற்றுள்ளது.

இதேவேளை கடந்த வருடம் வெளியிடப்பட்ட வீடியோவானது அதிக டிஸ்லைக் பெற்று (17 மில்லியன்) எதிர்மறையான சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers