பல மின்னஞ்சல்களை Attachment முறையில் அனுப்பும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

மின்னஞ்சல் சேவையை தரும் நிறுவனங்களில் கூகுளின் ஜிமெயில் ஆனது முன்னணி வகிக்கின்றது.

இதில் ஒரே நேரத்தில் பலருக்கு மின்னஞ்சல் அனுப்பும் வசதி ஏற்கனவே காணப்படுகின்றது.

எனினும் தற்போது ஜிமெயில் சேவையில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பல மின்னஞ்சல்களை Attachment முறையில் அனுப்ப முடியும்.

இதனை இரண்டு முறைகளில் மேற்கொள்ள முடியும்.

முறை 1

முதலில் புதிய மின்னஞ்சல் ஒன்றினை அனுப்புவதற்கு தயார் செய்ய வேண்டும்.

பின்னர் இணைக்க வேண்டிய (Attach) மின்னஞ்சல்களை தெரிவு செய்ய வேண்டும்.

அடுத்து தெரிவு செய்த மின்னஞ்சல்களை Drag and Drop முறையில் அனுப்புவதற்கு தயார் செய்யப்பட்டுள்ள மின்னஞ்சலினுள் கொண்டுவர வேண்டும்.

தற்போது அனைத்து மின்னஞ்சல்களும் Attachment முறையில் இணைக்கப்பட்டிருக்கும்.

இறுதியாக Send பொத்தானை கிளிக் செய்து அனுப்ப வேண்டும்.

முறை 2

Attachment முறையில் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல்களை தெரிவு செய்ய வேண்டும்.

பின்னர் மேல் மூலையிலுள்ள (மூன்று புள்ளிகள்) மெனுவினை கிளிக் செய்து Forward as Attachment என்பதை தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்