Search Seeding வசதியினை அதிரடியாக நிறுத்தியது அமேஷான்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலகளவில் முன்னணி மின் வணிக நிறுவனமாக திகழும் அமேஷான் இந்தியாவிற்காக பிரத்தியேக தளத்தினை வைத்திருக்கின்றது.

இத் தளத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த Search Seeding எனும் வசதியினை அதிரடியாக நிறுத்தியுள்ளது.

இவ் வசதியின் மூலம் இந்திய அளவில் தேடலில் முதலிடம் பிடித்த பொருட்களை கண்டறிய முடியும்.

எனினும் கடந்த சில மாதங்களாக இவ் வசதி முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த வசதியானது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இது அதிகம் தேடப்பட்ட பொருட்களை மாத்திரமே முதற்பக்கத்தில் காட்டும் எனவும், அதிகம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை அல்ல எனவும் அமேஷான் தெரிவித்துள்ளது.

இவ் வசதியினை பல வணிகர்கள் தவறாக பயன்படுத்தியமையே இவ்வாறு நிறுத்தப்படுவதற்கான காரணம் எனவும் அமேஷான் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...