டிக்டாக்கிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்: மீண்டும் தடை செய்யப்படுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
18Shares

சீனாவின் பிட்டான்ஸ் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட டிக்டாக் செயலியானது உலகளவில் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளது.

குறிப்பாக ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் இச் செயலியை இந்தியாவில் மாத்திரம் 200 மில்லியன் பயனர்கள் பயன்படுத்திவருகின்றனர்.

இதனைக் கருத்தில்கொண்டு இந்திய அரசியல் கட்சிகள் குறித்த செயலியைப் பயன்படுத்தி தமது பிரச்சாரங்களை முடுக்கிவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக்கொண்டு இந்த முடிவினை அரசியல் கட்சிகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாச்சாரப் பிறழ்வை ஏற்படுத்துவதாகக் கூறி இந்த வருட ஆரம்பத்தில் டிக் டாக் செயலினை மதுரை உச்ச நீதிமன்றம் தடை செய்திருந்தது.

இவ்வாறான நிலையில் அரசியல் சார்ந்த வீடியோக்களை பதிவேற்றுவதற்கும் நீதிமன்றங்கள் தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் என்பன அரசியல் சார்ந்த விளம்பரங்களை தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்