கூகுள் சேவைகள் விரைவில் Microsoft Outlook இல்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன தமது சேவைகளைப் பயனர்களுக்கு வெவ்வேறாகவே வழங்கி வருகின்றன.

எனினும் விரைவில் கூகுள் சேவைகளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Outlook சேவையில் பயன்படுத்த முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஜிமெயில், கூகுள் ட்ரைவ் மற்றும் கேலண்டர்களை மைக்ரோசொப்ட் Outlook இல் பயன்படுத்தலாம்.

இச் சேவையினை மொபைல் அப்பிளிக்கேஷன்களிலும் பெற முடியும்.

இப் புதிய வசதியானது பயனர்களின் செயற்பாடுகளை இலகுவாக்குவதுடன், பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் எனவும் நம்பப்படுகின்றது.

இதேவேளை மைக்ரோசொப்ட்டின் Calender, Keep Notes மற்றும் Dropbox சேவைகள் ஏற்கனவே ஜிமெயிலில் இணைத்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்