புதிய வசதியை பரிசோதிக்கும் TikTok: விரைவில் பயனர்களின் பாவனைக்கு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சீனாவின் சிறிய வீடியோக்களை உருவாக்கும் அப்பிளிக்கேஷன் ஆன டிக்டாக் ஆனது இன்று உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது.

இந்த அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி Link in Bio எனும் குறித்த வசதி தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ் வசதி மூலம் தமது விபரங்களை பயனர்கள் மின் வணிக இணையத்தளங்களுடன் இணைக்க முடியும்.

எனவே தமது வீடியோக்களை பார்வையிட வரும் பயனர்களை குறித்த மின் வணிக தளங்களை பார்வையிடச் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டக்கூடியதாக இருக்கும்.

இப் புதிய வசதியானது Fabian Bern என்பவரது டிக்டாக் கணக்கில் பரீட்சிப்பின்போது காண்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்றினையும் அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தவிர டிக்டாக் நிறுவனமும் இப் புதிய வசதி பரீட்சிப்பில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...