அன்ரோயிட் சாதனங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்: எச்சரிக்கையாக இருக்கவும்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களைக் கொண்டு அறிமுகமாகும் சாதனங்கள் தொடர்பில் புதிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இச் சாதனங்களில் ஏற்கனவே நிறுவப்பட்டு வரும் அப்பிளிக்கேஷன்கள் ஆபத்தானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kryptowire எனும் மொபைல் சைபர் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆய்வின்போது Asus, Samsung, Xiaomi உட்பட மொத்தம் 29 மொபைல் உற்பத்தி நிறுவனங்களினால் உருவாக்கப்பட்ட அன்ரோய்ட் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது கொள்வனவு செய்யும்போதே குறித்த சாதனங்களில் நிறுவப்பட்டிருந்த அப்பிளிக்கேஷன்கள் தொடர்பாக சுமார் 146 வரையான பாதிப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றில் சாம்சுங் சாதனங்களிலேயே அதிகளவான பாதிப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...