புதிய வசதியை அறிமுகம் செய்யும் LinkedIn: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு வலையமைப்பு தளமாக LinkedIn விளங்குகின்றது.

இத் தளமானது இந்திய பயனர்களுக்காக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி இந்திய பயனர்கள் ஒவ்வொருவதும் தமது சிறிய வியாபாரம் உட்பட தாம் செய்யும் பகுதிநேர பணிகள் தொடர்பான விபரங்களையும் தெரியப்படுத்தலாம்.

இவ் வசதியானது Open for Business என அழைக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் இவ் வசதி கடந்த ஜுலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றது.

உலகம் முழுவதும் சுமார் 660 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட LinkedIn தளத்தில் 30 மில்லியன் நிறுவனங்களினது தகவல்களும் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்