புதிய இணைய உலாவியினை அறிமுகம் செய்யும் மைக்ரோசொப்ட்: எப்போது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

முன்னர் இன்டெர்நெட் எக்ஸ்ப்புளோரர் எனும் இணைய உலாவியினை பயனர் பயன்பாட்டிற்கு விட்டிருந்த மைக்ரோசொப்ட் நிறுவனம் பின்னர் மேம்படுத்தப்பட்ட மைக்ரோசொப்ட் எட்ஜ் எனும் உலாவியினை அறிமுகம் செய்திருந்தது.

முன்னைய உலாவியினை விடவும் மைக்ரோசொப்ட் எட்ஜ் உலாவியானது பயனர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றிருந்தது.

இப்படியான நிலையில் புதிய குரோமியம் எட்ஜ் உலாவியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி இப் புதிய இணைய உலாவி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

90-ற்கும் மேற்பட்ட மொழிகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள இவ் உலாவியினை விண்டோஸ் மற்றும் macOS பயனர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்