கூகுளில் இனி இந்த கோப்புக்களை பார்க்க முடியாது: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் தேடலில் படங்கள், வீடியோக்கள், பாடல்கள் என பல வகையான கோப்புக்களை தேடி பார்க்க முடியும்.

இவற்றில் வீடியோக்கள் அனேகமான Flash கோப்புக்களாகவே காணப்படும்.

இவ் வகை கோப்புக்களை கூகுள் தேடலில் காண்பிக்கப்படுவதை இவ் வருட இறுதியுடன் நிறுத்தவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோன்று இணையத்தளங்களில் காணப்படும் Flash கோப்புக்களையும் கூகுள் குரோம் உலாவியில் பார்க்க முடியாது.

இக் கோப்புக்களை பார்வையிடுவதற்கு பயனர் கணினிகளில் Flash Player கண்டிப்பாக நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறில்லாவிடில் குறித்த கோப்பு உள்ள பகுதி வெற்றிடமாகக் காண்பிக்கப்படும்.

இதனை அதிகளவான பயனர்கள் விரும்பவில்லை என்பதன் காரணமாகவே கூகுள் இந்த முடிவுக்கு வருகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்