பேஸ்புக்கின் அடுத்த அதிரடி: பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தியை தன்வசப்படுத முயற்சி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
43Shares

குறுகிய காலத்தில் முன்னணி சமூகவலைத்தளமாக உயர்ந்த பேஸ்புக் ஆனது வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றினை தன்வசப்படுத்தியிருந்தது.

இப்படியான நிலையில் தற்போது மூளையில் உண்டாக்கப்படும் சமிக்ஞைகளை உணரக்கூடிய இலத்திரனியல் மணிக்கட்டு பட்டி உற்பத்தியினையும் தன்வசப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது குறித்த மணிக்கட்டுப் பட்டியினை CTRL-Labs நிறுவனமே வடிவமைத்து வருகின்றது.

இந்நிறுவனத்துடன் பேஸ்புக் நிறுவனம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 500 மில்லியன் டொலர்கள் தொடக்கம் 1 பில்லியன் டொலர்கள் வரையான தொகையினை CTRL-Labs நிறுவனத்திற்கு வழங்க பேஸ்புக் தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இது தொடர்பான பேஸ்புக் நிறுவனம் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்