சந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.

Report Print Abisha in ஏனைய தொழிநுட்பம்

புவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகிய, சந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது என்று ISRO தெரிவித்துள்ளது!

நிலவின் தென் துருவத்தில் கனிம வளங்கள், தண்ணீர் இருக்கின்றதா, அங்கு மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய சந்திரயான் - 2 என்ற விண்கலத்தை கடந்த யூலை 22-ஆம் நாள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'ISRO' வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இந்நிலையில், திரவ இன்ஜினை இயக்கி சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பாக 'ISRO' வெளியிட்ட அறிக்கையில், திட்டமிட்டபடி காலை 9.02 மணிக்கு நிலவின் பாதையில் சந்திராயன் -2 கொண்டு செல்லப்பட்டது.

4 முறை திசையை மாற்றிய பிறகு 100 கி.மீ.., தூரத்தில் கடைசி சுற்றுப்பாதையை சந்திராயன்- 2 அடையும் என குறிப்பிட்டுள்ளது.

பின்னர், செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கி, விக்ரம் லேண்டர் ஆய்வை துவங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்