தாய்லாந்தில் உள்ள 300,000 மைல்கள் நீளமான பாதைகளை மேப்பில் கொண்டுவருவதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த பேஸ்புக் தீர்மானித்துள்ளது.
இப் பாதைகள் தற்போது உள்ள எந்தவொரு டிஜிட்டல் மேப்களிலும் உள்ளடக்கப்படவில்லை.
எனவே புதிய மேப்பில் இப் பாதைகளை உள்ளடக்கி பொதுமக்களின் பாவனைக்கு விட பேஸ்புக் முயற்சித்துவருகின்றது.
சாதாரண முறையில் 100 வரைபட வல்லுனர்கள் இப் பாதைகளை கொண்ட மேப்பினை உருவாக்க எடுக்கும் காலத்தை விட அரைப் பங்கிற்கும் குறைவான காலமே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதனால் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கால அளவு ஏறத்தாழ 18 மாதங்களாக இருக்கும் எனவும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்த மேப்பானது அனர்த்த நிலைமைகளின்போது பயன்படுத்துவதற்கும், நகர திட்டமிடல்களின்போதும் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.