பழைய மொபைல் சாதனங்களில் இருந்து தயாராகும் 2020 ஒலிம்பிக் பதக்கங்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதற்காக 5,000 வரையிலான பதக்கங்கள் தயார் செய்யப்படவேண்டியுள்ளது.

இவற்றில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

இப் பதக்கங்களை வழமைக்கு மாறான முறையில் பழைய மொபைல் சாதனங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உலோகங்களில் இருந்து தயாரிப்பதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் இலத்திரனியல் சாதனங்களை எப்படி பயனுள்ள வகையில் மீள்சுழற்சிக்கு உட்படுத்தி சூழலை பாதுகாப்பது என்பது தொடர்பில் உலகிற்கு எடுத்துரைக்க முடியும் என ஜப்பான் கருதுகின்றது.

இதேவேளை மொபைல் சாதனங்களில் தங்கம் உட்பட மேலும் சில உலோகங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்