கூகுள் நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் தனது குரோம் உலாவியின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது.
இதற்காக அந்த வருடமே புதிய திட்டம் ஒன்றினையும் அமுல்ப்படுத்தியது.
இதன்படி குரோம் உலாவியில் உள்ள பாதுகாப்பு பிரச்சினைகளை கண்டறிந்து சொல்பவர்களுக்கு பரிசுத்தொகையினை வழங்கவுள்ளதாக அறிவித்தது.
இப் பரிசுத்தொகையானது ஆரம்பத்தில் 5,000 டொலர்களாக காணப்பட்டது.
அதன் பின்னர் அதி துல்லியமான தகவல் சொல்பவர்களுக்கு இப் பரிசுத்தொகை 15,000 டொலர்கள் என தெரிவித்தது கூகுள்.
இப்படியான நிலையில் தற்போது இப் பரிசுத்தொகை இரட்டிப்பு செய்யப்பட்டு 30,000 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குரோம்பொக்ஸ் அல்லது குரோம்புக் என்பவற்றில் உள்ள பாதுகாப்பு பிரச்சினைகளை கண்டறிந்து சொல்பவர்களுக்கான பரிசுத்தொகையாக 150,000 டொலர்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.