அண்மைக் காலமாக பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் சேவைகள் ஸ்தம்பிதம் அடைவது அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது.
இதன் வரிசையில் தற்போது கூகுள் கலண்டர் சேவையும் நேற்றைய தினம் மாலை நேரத்தில் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
உலக அளவில் பல பயனர்கள் இவ் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக இந்தியாவில் உள்ள பயனர்களால் இச் சேவையை பயன்படுத்த முடியாது போயுள்ளது.
இதன்போது Not Found Error 404 எனும் செய்தி காண்பிக்கப்பட்டுள்ளது.
இப் பிரச்சினை தொடர்பாக பயனர்கள் டுவிட்டர் தளத்தினூடாக புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சில மணி நேரத்தின் பின்னர் குறித்த சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.