மொஸில்லா பையர்பாக்ஸ் உலாவியில் வருகிறது அதிரடி மாற்றம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் முன்னணி இணைய உலாவிகளுள் ஒன்றாக மொஸில்லா நிறுவனத்தின் பையர்பாக்ஸ் உலாவியும் விளங்குகின்றது.

சிறந்த இணையத்தேடல் வசதியினை வழங்கிவரும் இவ் உலாவியில் அவ்வப்போது புதிய வசதிகள் உள்ளடக்கப்படுகின்றமை வழக்கமாகும்.

எனினும் தற்போது புதிய வசதிகளுக்கு அப்பால் புதிய லோகோவுடன் மீண்டும் அறிமுகமாகவுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜுன் மாதம் 10 ஆம் திகதி இவ் இணைய உலாவிக்கான புதிய லோகோ அறிமுகம் செய்யப்படுகின்றது.

இது தொடர்பான தகவல்கள் கடந்த வருடமே வெளியிடப்பட்டிருந்தன.

மொஸில்லா நிறுவனத்தின் இயக்குனர்களுள் ஒருவரான ரிம் மூறே இந்த கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers