அன்ரோயிட் கைப்பேசிகளில் உள்ள மல்வேர்களை நீக்குவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஸ்மார்ட் கைப்பேசிகளில் நிறுவப்படும் அப்பிளிக்கேஷன்கள் ஊடாக மல்வேர்கள் பரவுகின்றமை தெரிந்ததே.

இவ்வாறு சில அப்பிளிக்கேஷன்கள் மல்வேர்களுடன் சேர்த்து எமது அனுமதி இன்றி நிறுவப்பட்டிருக்கும்.

இணையத்தளத்தினை கைப்பேசிகளில் பயன்படுத்தும்போது இவ் அசம்பாவிதம் ஏற்படும் ஆபத்து காணப்படுகின்றது.

எனினும் குறித்த மல்வேர்களை இலகுவாக நீக்குவதற்கான வழிமுறை ஒன்று காணப்படுகின்றது.

இதற்காக முதலில் ஸ்மார்ட் கைப்பேசியினை Turn Off செய்ய வேண்டும். பின்னர் Safe Mode இல் Reboot செய்ய வேண்டும்.

இதற்காக ஒலி கூட்டும் பொத்தானையும், Power பொத்தான் என்பவற்றினை கூட்டாக பயன்படுத்த வேண்டும்.

அதன் பின்னர் Settings பகுதியில் உள்ள Apps என்பதை தெரிவு செய்யவும்.

அதில் உங்களால் நிறுவப்படாத அப்பிளிக்கேஷன்களை தேடிப்பார்க்கவும்.

அவ்வாறான அப்பிளிக்கேஷன்கள் காணப்படின் Uninstall செய்யவும்.

சில சமயங்களில் Uninstall பொத்தான் Disable செய்யப்பட்டிருக்கும்.

இதன்போது Settings இல் உள்ள Security என்பதில் காணப்படும் Device Administrators என்பதிலுள்ள தெரிவை நீக்கி (Deselect) பின்னர் Uninstall செய்யவும்.

அதன் பின்னர் சாதாரண நிலையில் கைப்பேசியினை Reboot செய்யவும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers