உங்கள் ஐபோன் திரையினை இலவசமாக மாற்றியமைக்க முடியுமா? அறிந்துகொள்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஆப்பிள் நிறுவனமானது சில மொடல் ஐபோன்களுக்கான திரைகளை இலவசமாக மாற்றி வழங்கும் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.

இச்0சேவையினைப் பெறுவதற்கு ஐபோன் திரைகளில் சில குறைபாடுகள் காணப்பட வேண்டும்.

அதாவது ஐபோன் திரையானது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தொடுகை (Touch) தொழில்நுட்பத்திற்கு பதிலளிக்காது இருந்தால் இலவசமாக மாற்றியமைக்க முடியும்.

அல்லது தொடுகை எதனையும் மேற்கொள்ளாத நிலையில் திரையானது தானாகவே இயங்குதலின்போது இலவசமாக திரையினை மாற்றியமைக்க முடியும்.

மேற்கண்ட பிரச்சினைகளை உங்கள் ஐபோன்களில் இனங்கண்டால் உடனடியாக அருகிலுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சேவை நிலையத்திற்கு கொண்டு செல்லவும்.

அங்கு அவர்கள் குறித்த ஐபோனை பரிசோதிப்பார்கள்.

பரிசோதனையின்போது திரையில் திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் இயங்க வைக்க முடியும் எனின் அதனை முதலில் நடைமுறைப்படுத்துவார்கள்.

அவ்வாறில்லை எனின் இலவசமாக மாற்றித் தருவார்கள்.

எனினும் iPhone X கைப்பேசியானது இப் பிரச்சினைகளுக்கு உள்ளானால் அதன் திரையை மாற்றுவதற்கு பணம் செலுத்தப்பட வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்