வாகனங்களின் பெட்ரோலின் அளவை சேமிக்க உதவும் கூகுள் மேப்: எப்படி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெயின விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்து உலகிலுள்ள பல நாடுகளிலும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் வாகனங்களில் பெட்ரோலை சரியான முறையில் திட்டமிட்டே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறு திட்டமிட்டு பெட்ரோலினை சேமிப்பதற்கு கூகுள் மேப்பினை பயன்படுத்த முடியும்.

அதாவது ஒரு இடத்திற்கு பயணிப்பதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட வழிகள் காணப்பட முடியும்.

அவற்றுள் மிகக் குறுகிய தூரம் கொண்ட பாதையை தேர்ந்தெடுத்து பயணிப்பதன் ஊடாக பெட்ரோலை சேமிக்க முடியும்.

பின்வரும் படிமுறைகள் ஊடாக கூகுள் மேப்பினை பயன்படுத்தி பயணிக்க வேண்டிய தூரத்தினை துல்லியமாக கணிக்க முடியும்.

முதலில் கூகுள் மேப்பினை இணைய உலாவியில் திறக்க வேண்டும்.

பின்னர் பயணிக்க ஆரம்பிக்கும் இடத்தினை Zoom செய்து ஆரம்ப புள்ளியை பதிவு செய்யவும்.

அதன் பின்னர் Right Click செய்து தோன்றும் மெனுவில் Measure Distance என்பதை தெரிவு செய்யவும்.

அதனை தொடர்ந்து சென்றடைய வேண்டிய இடத்தினை கிளிக் செய்து பயணத் தூரத்தினை அளவிடவும்.

இவ்வாறு ஒரே நேரத்தில் பயணிக்க வேண்டிய ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களின் தூரத்தை ஒரே தடவையில் அளவிட முடியும்.

அதன் பின்னர் குறுகிய தூரத்தினை தேர்ந்தெடுப்பது மாத்திரமன்றி தேவையான அளவு பெட்ரோலை மாத்திரம் வாகனத்தில் நிரப்பி பயணிக்கவும் முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்