புதிய அவதாரம் எடுக்க காத்திருக்கும் பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

புகைப்படங்களை பகிரும் இன்ஸ்டாகிராம் தளமும், குறுஞ்செய்திகளை பகிரும் வாடஸ் ஆப் அப்பிளிக்கேஷனும் பேஸ்புக் நிறுவனத்தினால் வாங்கப்பட்டவை என்பது அறிந்ததே.

தற்போது தனித்தனியாக காணப்படும் இவ் இரண்டு சேவைகளையும், பேஸ்புக் மெசஞ்சர் சேவையையும் ஒன்றாக இணைத்து சேவையை வழங்க பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த தகவலை நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள நிலையில் பிபிசி நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால் ஒரே கணக்கினை பயன்படுத்தி பயனர்கள் மூன்று சேவைகளையும் இலகுவாக கையாள முடியும் என நம்பப்படுகின்றது.

இச் சேவையானது இவ்வருட இறுதியில் அல்லது 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers