வேலை செய்யாத வாட்ஸ் ஆப்! ட்விட்டருக்கு படையெடுத்த மக்கள்

Report Print Balamanuvelan in ஏனைய தொழிநுட்பம்

உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு வாட்ஸ்ஆப் வேலை செய்யாததால், மக்கள் ட்விட்டரை நோக்கி படையெடுத்தனர்.

உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ் ஆப் செயலி, நேற்றிரவு சுமார் 11.30 முதல் 1.00 மணி வரை முடங்கியதால், செய்திகளை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் மக்கள் தவித்தனர். இதையடுத்து மக்கள் ட்விட்டருக்கு படையெடுத்தனர்.

வாட்ஸ்ஆப் செயல்படவில்லை என ஏராளமானோர் ட்வீட்களை பதிவிட்டனர். ஒருவர், வாட்ஸ் ஆப் வேலை செய்யவில்லை என்றால் எனக்கு மட்டும்தானா என்று உறுதி செய்து கொள்கிறேன், நன்றி ட்விட்டர் என்று பதிவிட்டிருந்தார்.

இன்னொருவர் வாட்ஸ் ஆப் செயலிழந்து விட்டது, உலகம் முழுவதும் ஒரே குழப்பம் என்று டவீட் ஒன்றை பதிவு செய்தார்.

பின்னர், வாட்ஸ் ஆப் மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகுதான் பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இரவில் வாட்ஸ் ஆப் செயல்படாததற்கே இத்தனை குழப்பம் என்றால், பகல் பொழுதாக இருந்தால் உலகமே ஸ்தம்பித்திருக்கும் போலும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...