ஐபோன்களில் பாடல்களை தானாகவே நிறுத்தச் செய்வது எப்படி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஸ்மார்ட் கைப்பேசிகளில் பாடல்களை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருப்போம்.

பாடல்களை நிறுத்தவேண்டும் என்றால் குறித்த அப்பிளிக்கேஷனுக்க சென்று Stop பொத்தானை அழுத்த வேண்டியிருக்கும்.

ஆனால் அவ்வாறில்லாமல் தொடர்ச்சியாக பாடிக்கொண்டிருக்கும்போது குறித்த நேரத்தின் பின்னர் தானாகவே பாடல்களை நிறுத்தும் வசதி ஐபோன் மற்றும் ஐபேட்களில் காணப்படுகின்றது.

இதனை செயற்படுத்துவதற்கு இறுதியாக அறிமுகம் செய்யப்பட்ட iOS இயங்குதளங்களில் ஒன்றினை நிறுவுதல் வேண்டும்.

அதன் பின்னர் ஐபோன் அல்லது ஐபேட்டில் Clock எனும் பகுதிக்கு செல்லவும்.

அங்கு காணப்படும் Timer எனும் வசதியினை தெரிவு செய்யவும்.

அங்கு பாடல்கள் தொடர்ச்சியாக பாட வேண்டிய நேர அளவினை தெரிவு செய்யவும்.

இப்போது When Timer Ends என்பதில் top Playing என்பதை தெரிவு செய்யவும்.

அதன் பின் Set என்பதை தெரிவு செய்து, Start பொத்தானை அழுத்தி Timer ஐ இயங்கச் செய்யவும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers