#10YearsChallenge திடுக்கிடும் தகவல்..! பின்னணி என்ன..?

Report Print Abisha in ஏனைய தொழிநுட்பம்

இரு தினங்களாக சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் #10YearsChallenge என்ற ஹாஷ்டாக் மூலம் பரப்பபடும் புகைப்படங்கள் பேசியல் ரெகக்னிஷேசன் தொழில்நுட்பத்தை அப்டேட் செய்ய பயன்படுத்துவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சமீப காலத்தை சமூக வலைதள சேலஞ்சுகளின் காலம் என்றே கூறலாம். ஐஸ்பக்கெட் சேலஞ்ச், புளூ சட்டை சேலஞ்ச், ஈட்டிங் சில்லி சேலச் என்று பல சேஞ்சுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஆனால் இதில் பொதுவான அனைத்து சேலஞ்சுகளும் ஏதோ ஒரு வகையில் தங்களின் உடலை வருத்துவதாகவோ அல்லது தனக்குதானே செலவு வைப்பதாகவே இருந்துள்ளது.

ஆனால் சமீபத்தில் வந்துள்ள 10YearsChallenge அப்படி இல்லை. நமது 10வருட பழைய புகைப்படத்தையும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டால் போதும்.

இதனாலேயோ என்னவோ தொடர்ந்து நடிகர்கள் முதல் கிராமத்தில் இருக்கும் பாமரன் வரை அனைவரும் இந்த சேலஞ்சில் தங்களை இணைத்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் #10YearsChallenge என்று தேடினால் அதில் கிடைக்கபெறுகிறது.

ஆனால் இது ஒருவகை தகவல் திருட்டு தொழில் நுட்பத்திற்காக தொடங்கப்பட்டது என்று அதிர்ச்சி தரும் தகவலை பிரபல எழுத்தாளர் கேட் ஓ நெய்ல் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பேஸ்புக் உங்களின் வயது வித்தியாசத்தில் உங்கள் முகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் வைத்து பேசியல் ரெகக்னிஷேசன் தொழில்நுட்பத்தை முறைகேடான முறையில் அப்டேட் செய்ய இந்த புகைப்படங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இது மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers