வாடிக்கையாளர்களை கவர அமேஷானின் புதிய திட்டம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தற்போது ஒன்லைனில் கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் பாரிய கேள்விக்குறி காணப்படுகின்றது.

காரணம் அனேகமான பொருட்கள் போலியாக அனுப்பிவைக்கப்படுகின்றன.

எனினும் இதனைத் தாண்டி அமேஷான் நிறுவனம் தொடர்ந்தும் நம்பிக்கையான சேவையை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் புதிய முயற்சியாக வாடிக்கையாளர்களுக்கு மாதிரிப் பொருட்களை (Samples) அனுப்பி வைக்கும் முயற்சியை ஆரம்பிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அமேஷானில் நீண்டகாலமாக பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கே இந்த வசதி அளிக்கப்படவுள்ளது.

இதன்படி ஒரு பொருளை கொள்வனவு செய்ய முயற்சிக்கும்போது அந்த பொருளிற்கான மாதிரி ஒன்று இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

குறித்த மாரிப் பொருள் வாடிக்கையாளர்களுக்கு பிடித்திருந்தால் அதன் பின்னர் அவர் பணம் கொடுத்து கொள்வனவு செய்ய முடியும்.

இப் புதிய வசதியானது நிச்சியம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers