சாம்சுங்கின் அட்டகாசமான திட்டம்: உருவாகின்றது அதிரடி ட்ரோன் விமானங்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சிறிய அளவே உடைய ட்ரோன் விமானங்கள் இன்று பெரிதும் பிரபல்யம் அடைந்துள்ளன.

இதனால் கைப்பேசி மற்றும் தொலைக்காட்சி வடிவமைப்பு நிறுவனமானது சாம்சுங்கும் ட்ரோன் வடிவமைப்பில் காலடி பதிக்கின்றது.

இந்நிறுவனம் உருவாக்கவுள்ள ட்ரோன்கள் தற்போது பாவனையில் உள்ள ட்ரோன் விமானங்களை விடவும் வித்தியாசமானவை.

அதாவது மடித்து எடுத்துச் செல்லக்கூடிய வகையில் போட்டெபிள் (Foldable Drone) ட்ரோன்களாக வடிவமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் மடிக்கக்கூடிய அவயங்கள், விசேட சென்சார்கள், கமெரா, ஜியோர்ஸ்கோப், முடுக்க மானி மற்றும் ஒரு காற்றழுத்தமானி என்பனவும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.

இதனால் அடுத்த வருடம் சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவேண்டிய புதிய தலைமுறை கேலக்ஸி கைப்பேசிக்கு பதிலாக இச் சாதனமே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers