உணவுகளை டெலிவரி செய்ய தயாராகும் ட்ரோன்கள்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சம காலத்தில் அனைத்துவிதமான வியாபாரங்களும் ஒன்லைன் மயப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு உணவு டெலிவரியும் விதிவிலக்கு அல்ல.

இந்தியாவில் தற்போது Zomato மற்றும் Swiggy என்பன மிகப்பிரம்மாண்டமான ஒன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் நிறுவனங்களாக விளங்குகின்றன.

ஒன்லைனில் ஆர்டர் செய்தபோதும் அதற்கான டெலிவரியை மனிதர்களே தற்போது செய்துவருகின்றனர்.

ஆனால் எதிர்காலத்தில் ட்ரோன் விமானங்களை பயன்படுத்துவதற்கு Zomato நிறுவனம் முனைப்புக்காட்டி வருகின்றது.

இந்த முறை மிகவும் வேகமானதாக இருக்கும் என்பதாலேயே Zomato நிறுவனம் உணவுப் பொட்டலங்களை காவிச் செல்லக்கூடிய ட்ரோன்களை வடிவமைக்கும் பணிகளில் இறங்கியுள்ளது.

ட்ரோன் விமானங்களை வடிவமைக்கும் பொறுப்பினை லூக்னோவில் அமைந்துள்ள TechEagle Innovations நிறுவனத்திடம் Zomato ஒப்படைத்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers