பாலைவனங்களில் கூட காற்றிலிருந்து நீரை பிரித்தெடுக்கும் சாதனம் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலகளவில் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிவருகின்றது.இதனால் பல்வேறு வகையிலும் குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் ஒரு அங்கமாகவே காற்றிலுள்ள நீராவியிலிருந்து நீரை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.

இம்முயற்சிக்கு தற்போது வெற்றிகிடைத்துள்ளது. சவுதி அரோபியாவில் உள்ள கிங் அப்துல்லா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இச் சாதனத்திற்கான மாதிரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்பின்படி வளிமண்டலத்தின் சுமார் 13 ட்ரில்லியன் தொன் நீராவி காணப்படுகின்றது.

இந்த நீராவிகளை குறித்த சாதனம் அகத்துறுஞ்சி நீராக சேமிக்கின்றது.

வறட்சி மிகுந்த பாலைவனங்களில் கூட நீராவியை நீராக சேமிக்கும் திறன் இச் சாதனத்திற்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers