பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட்பம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங்கள் இயங்காதிருக்குமே அன்றி அவர்களின் மூளை செயற்படு நிலையிலேயே காணப்படும்.

இவர்களால் சிந்திக்கவும், தூண்டல்களை பெற்றுக்கொள்ளவும் முடிகின்ற போதிலும் அவற்றிற்கான துலங்கல்கலை காட்ட முடிவதில்லை.

எனவே இவ்வாறானவர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இலகுவாக தொடர்புகொள்வதற்காக BrainGate2 எனும் முறைமைய பயன்படுத்தி மூளையால் ஊடுகடத்தப்படும் இலத்திரனியல் சமிக்ஞைகளை டேப்லட்களின் உதவியுடன் தகவல்களாக மாற்றக்கூடிய சாதனம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது மூளையின் செயற்பாடுகளை அசையும் காட்டியின் மூலம் (Cursor) மாயை நிலையிலுள்ள சுட்டி ஒன்றுக்கு அனுப்பப்டும்.

இந்த மாயை சுட்டியானது வயர்லெஸ் இணைப்பு மூலம் டேப்லட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இத் தொழில்நுட்பத்தின் மூலம் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களால் மின்னஞ்சல் அனுப்புதல், பெறுதல் உட்பட மேலும் 7 விதமான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers