அமேஷன் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அலெக்ஸ்ஷா சாதனம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இணைய இணைப்பில் இச் சாதனம் இணைக்கப்பட்டிருக்கும்போது பயனர்களின் குரல்வழி கட்டளைகளுக்கு ஏற்றாற்போல் தேடல்களையும், பதில்களையும் அளிக்கவல்லது.
இச் சாதனத்தில் தற்போது ஸ்கைப் அழைப்பினை ஏற்படுத்தும் வசதியும் உள்ளடக்கப்படவுள்ளது.
இதற்கான பணிகளில் மைக்ரோசொப்ட் நிறுவனம் அமேஷனுடன் இணைந்து பணியாற்றிவருகின்றது.
இவ் வசதியின் ஊடாக சேமிக்கப்பட்டுள்ள தொடர்பு இலக்கங்களுக்கு ஸ்கைப் அழைப்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
உதாரணமாக “Alexa, call Tom on Skype” எனுட் கட்டளை மூலம் டொம் என்பரின் தொடர்பு இலக்கத்திற்கு அலெக்ஸ்ஷா சாதனம் தானாகவே அழைப்பினை ஏற்படுத்தும்.
வீடியோ அழைப்புக்களையும் மேற்கொள்ளக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.