ட்ரோன் விமானங்களை பாவிப்பதால் இப்படி ஒரு பிரச்சினை ஏற்படும் என்பதை அறிவீர்களா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ட்ரோன் வகை விமானங்களின் பாவனையால் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வன விலங்கு நிபுணர்களும், காவலாளிகளும் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஸ்கொட்லாந்து பகுதியில் சில ட்ரோன்கள் இனப்பெருக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பறவைகள், விலங்குகளுக்கு அண்மையாகப் பறப்பதாக தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் கடல்நாய்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்ட தளங்களில் பின்தொடரப்படுவதாகவும், இது அதிகம் அவற்றின் குட்டிகளைப் பாதிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், பறவைகள் சிறைப்பிடிக்கப்படுவது தொடர்பாகவும், பாறைகள் கடலினுள் வீழ்த்தப்படுவது தொடர்பாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக PAW அமைப்பு கருத்துத் தெருவிக்கையில், ட்ரோன் செயற்பாட்டாளர்கள் அது தொடர்பான சட்டங்களை தெரிந்திருப்பது அவசியம் என்கின்றனர்.

சில முக்கிய பகுதிகளில் இவர்களால் ஏற்படுத்தப்படும் குழப்பங்களானது உண்மையில் ஒரு குற்றம் என்கின்றனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...