காலநிலை மாற்ற அவதானிப்பை மேம்படுத்த விண்ணிற்கு பாய்ந்தது Aeolus செயற்கைக்கோள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலக அளவில் காற்றின் வேகம் மற்றும் ஈரப்பதனை துல்லியமாக அறிந்து தெளிவான காலநிலையை முன்னறிவிப்பை வெளியிட உதவியாக Aeolus எனும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஆனது நேற்றைய தினம் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தினால் ஏவப்பட்டுள்ளது.

இது நேரடியாகவே காற்றின் வேகம் மற்றும் திசை என்பவற்றினை கணிக்கக்கூடியது.

நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை விண்ணில் இச் செயற்கைக்கோளினை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் காலநிலை சீரின்மை காரணமாக நேற்றைய தினம் புதன்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

விண்ணில் இருந்து பூமியை நோக்கிய வரும் கழியூதாக் கதிர்களின் துடிப்பு எண்ணிக்கையை கணித்தல், காற்றில் உள்ள சிறிய துணிக்கைகளின் அதிர்வை கணித்தல் போன்வற்றினையும் இச் செயற்கைக்கோளினால் துல்லியமாக செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒருமுறையும் நோர்வேயின் ஆர்ட்டிக் தீவான Svalbard பகுதியில் அமைந்துள்ள நிலையத்திற்கு தகவல்களை அனுப்பவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...