குறைந்த கட்டணத்தில் கிளவுட் சேமிப்பு வசதியை வழங்கும் கூகுள் ஒன்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஒன்லைன் சேமிப்பு வசதி எனப்படும் கிளவுட் சேமிப்பு வசதியை பல்வேறு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

இவற்றுள் குறைந்தளவு சேமிப்பு வசதி இலவசமாகவும், அதிகளவு சேமிப்பு வசதி கட்டண அடிப்படையிலும் வழங்கப்பட்டு வருகின்றது.

எனினும் கட்டணம் செலுத்தப்பட்ட சேவையை ஏனைய நிறுவனங்களை விடவும் குறைந்த கட்டணத்தில் கூகுள் ஒன் வழங்குகின்றது.

இதன்படி 100GB சேமிப்பு வசதியை 1.99 எனும் மாதாந்தக் கட்டணத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று 200GB சேமிப்பு வசதியை 2.99 டொலர்களிலும், 2TB வசதியை 9.99 டொலர்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

அமெரிக்காவில் உள்ள சந்தாதாரர்கள் இப் புதிய கட்டணத்தின் அடிப்படையிலான வசதியினை தற்போது அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers