பொருட்களை மோப்பம் பிடித்தறியும் நாஸா வல்லுனர்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

George Aldrich என்பவர் 44 ஆண்டுகளாக நாஸாவில் இரசாயனவியல் வல்லுனராக இருந்துள்ளார்.

இவர் பொதுவாக விண்வெளிக்கு கொண்டுசெல்லப்படும் பொருட்களின் நச்சுத்தன்மை பற்றிய சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வசிக்கக்கூடிய பிரதேசங்களுக்கு கொண்டுசெல்லப்படும் பொருட்களை முகர்ந்து அனுமதிக்கமுடியாத, விண்வெளி வீரர்களுக்கு குமட்டலை உண்டுபண்ணக்கூடிய அவர்களது திறனைக் குறைத்து, இலக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களுக்காக பரிசீலனை செய்கின்றனர்.

இதற்கென ஜவர் கொண்ட குழுவொன்று பொருட்களை பரிசீலித்து அவற்றுக்கு 0 தொடக்கம் 4 வரையிலான புள்ளிகளை வழங்குகின்றனர். பொருளொன்று 2.5 புள்ளியைத் தாண்டும் போது அது சோதனையில் தோற்றுப் போகின்றது.

பரிசீலிக்கப்படும் அப்பொருள் இவர்களுக்கு காட்டப்படுவதில்லை. அதற்கு இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இவ்வாறு George Aldrich அண்மையில் Reddit AMA இல் எழுதியுள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...