பல அன்ரோயிட் சாதனங்களில் உள்ள முக்கிய குறைபாடு கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தற்போது உலக அளவில் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட சாதங்களின் பயன்பாடே அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவ் இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களை பல்வேறு முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்கள் வடிவமைத்து வருகின்றன.

இந்நிலையில் அனேகமான அன்ரோயிட் சாதனங்களின் நிலைப்பொருளில் (Firmware) குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Asus, Essential, LG, மற்றும் ZTE போன்ற நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்படும் அன்ரோயிட் சாதனங்களே அதிக அளவில் இக் குறைபாட்டினை உடையதாக இருக்கின்றது.

10 வெவ்வேறு சாதனங்களில் நிலைப்பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோதே இந்த குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த குறைபாடு உள்ள நிலையிலேயே சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்படவுதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers